Categories
தேசிய செய்திகள்

உ.பியில் அதிர்ச்சி… டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி கும்பல்… பரபரப்பில் போலீசார்..!!

இந்த சண்டையின் போது ரவுடிகள் சுட்டதில் டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா 4 சப் இன்ஸ்பெக்டர் உட்பட 8 காவல் துறையினர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 6 காவலர்கள்  காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. அவர்களின் நிலை மோசமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

ரவுடிகள் தாக்கியதில் காவல்துறையினர் சுட்டுக்கொலை செய்யப்பட்டது கான்பூரில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.. சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விகாஸ் துபே உட்பட அவரது ஆட்களை (குற்றவாளிகள்)  வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யும்படி டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் மோதலில் உயிரிழந்த காவல்துறையினர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |