கொரோனாவை முற்றிலும் தடுத்துவிட்டதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் 190 க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வல்லரசு நாடுகளில் இந்த வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வர தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதிலும் பரவலை தடுப்பதிலும் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வைரஸ் குறித்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், உலக அளவில் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்திய இந்த கொரோனா வைரஸை வடகொரிய அரசு முற்றிலுமாக தடுத்துள்ளது. இருப்பினும் இந்தத் தொற்று நோய்க்கு எதிரான முயற்சியில் வெற்றி அடைந்து விட்டோம் என்று மனநிறைவும், மகிழ்ச்சியும் அடையாமல் கூடுதல் கவனத்துடன் எச்சரிக்கையாக செயல்படுமாறு மக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.