இந்தியா – சீனா எல்லை பகுதியில் உள்ள லடாக் பகுதியில் ஆய்வு செய்த பிரதமர் மோடி வீரர்களிடம் பேசும் போது, இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ராணுவ வீரர்களின் துணிச்சல் முன்மாதிரியானது. இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலை ஒரு போதும் நாடு மறக்காது. இந்திய ராணுவத்திற்கு உலகில் யாரையும் எதிர்கொள்ளும் சக்தி உண்டு. இந்திய ராணுவ வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவும் இல்லை.
மலையின் சிகரங்களைவிட இந்திய வீரர்களின் துணிச்சல் உயரமானது.இந்திய வீரர்களின் தைரியம், மன தைரியத்தை கண்டு எதிரிகள் பயப்படுகிறார்கள். அமைதியை விரும்பும் நாம் தேவைப்பட்டால் எதிரிகளை களத்தில் சந்திக்கவும் விரும்புகிறோம். மோடி திருக்குறளை மேற்கொள்காட்டி லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசியது குறிப்பிடத்தக்கது.