சீனாவின் நடவடிக்கைகளைக் கண்டித்து அந்நாட்டின் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது
ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. இது ஹாங்காங்கில் இருக்கும் தன்னாட்சியை பறிப்பதற்கான செயல் என பிரிட்டனும் அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் பல சீனாவை கண்டித்து வரும் நிலையில் அதன் நடவடிக்கைகளை கண்டித்து சீனா மீது தடைகளை விதிக்க அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் கொடுத்துள்ளது.
இந்நிலையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீன நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் ஹாங்காங்கிற்கு வணிகம் செய்ய வழங்கப்பட்ட சிறப்பு தகுதியும் முடிவிற்கு வந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.