Categories
தேசிய செய்திகள்

அமைதியை அடைய வீரமே அடிப்படை – பிரதமர் மோடி கருத்து …!!

கள்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்வதாகவும் அமைதியை அடைய வீரமே அடிப்படை என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

லடாக்கில் பாதுகாப்பு படை வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, மோதலில் வீரமரணம் அடைந்த நமது வீரர்களின் தியாகத்தை நாடு ஒருபோதும் மறக்காது என தெரிவித்தார். வீரர்களின் உயிர் தியாகம் நாட்டின் வளத்தை உலகறிய செய்துள்ளதாகவும், மலை சிகரம் விட உயரமானது என்று கூறினார். இந்திய வீரர்கள் பயமரியாதவர்கள் என்று குறிப்பிட்ட பிரதமர் இந்திய ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குவதாக தெரிவித்துள்ளதாகவும், எந்த எதிரியையும் எதிர்கொள்ளும் வலிமை என்றும் கூறினார்.

கள்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம் என்றும், ஆக்கிரமிப்பு சக்திகள் வலுவிழந்துவிட்டதாகவும், ஆக்கிரமிப்பு காலம் முடிந்து விட்டதாகவும், இது வளர்ச்சியின் காலம் என்று கூறினார். அமைதியை அடைய வீரமே அடிப்படை என்று தெரிவித்த பிரதமர் படைக்கு தேவையான மாண்புகளை திருக்குறள் மூலம் மேற்கோள் காட்டினார். வீரம், மானம், முன் வீரர்கள் சென்ற வழியில் செல்லுதல், தலைவரால் நம்பி தெளியப்படுதல்  ஆகிய 4 பண்புகளும் படைக்கு சிறந்தவை என விளங்கினார்.வீரர்கள் இடையை  பிரதமர் மோதி ஆற்றிய உரை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Categories

Tech |