Categories
ஆன்மிகம் ராசிபலன்

மேஷ ராசிக்கு… பண வரவு இருக்கும்… சந்தோஷம் நிறைந்த நாள்…!!

மேஷ ராசி அன்பர்களே..!! இன்று அடுத்தவர்களிடம் ஏற்படும் பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பண வரவு ஓரளவு சிறப்பாகவே இருக்கும். ஆனால் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட்டாலும் அடுத்தவரையும் நம்புவதில் சிக்கல்கள் கொஞ்சம் இருக்கும். அதனால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சந்தித்தவர்களால்  ஓரளவு சந்தோஷம் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு குறிக்கீடாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள் மாமன் மைத்துனர் வழியில் மனம் மகிழும் சம்பவமொன்று நடைபெறும் கொடுக்கல் வாங்கல்கள் திருப்திகரமாக இருக்கும் உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகிச் செல்லலாம் மாற்று மதத்தினரின் உதவிகள் கிடைக்கும்.

இன்றைய நாள் ஓரளவு சிறப்பான  நாளாகத்தான் இருக்கும். மற்றவரிடம் உரையாடும் பொழுது மட்டும் கொஞ்சம் வாக்குவாதங்கள் இல்லாமல் உரையாட  பழகிக்கொள்ளுங்கள். காதலர்களுக்கு இன்றைய  நாள் இனிமையான நாளாக இருக்கும். காதலில் புத்துணர்ச்சி  ஏற்படும். அதே போல் புதிதாக காதல் வயப்படும் கூடிய சூழலும் இருக்கிறது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். அது  உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |