மிதுன ராசி அன்பர்களே…!! இன்று தன வரவு தாராளமாக வந்து சேரும். துன்பம் வருவதுபோல் இருக்கும் ஆனால் துன்பம் எதுவும் வராது. எந்த ஒரு விஷயத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும் மனம் மகிழ்ச்சியாகவே காணப்படும். மனதில் ஏதேனும் கவலை இருந்தாலும் அதன் பிறகு சென்றுவிடும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்தாலும் போதுமானதாக இருக்கும். பய உணர்வு அவ்வப்போது வரும். தயவுசெய்து எதைப் பற்றியும் நீங்கள் பயந்து கொள்ள வேண்டாம் உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். ஆகையால் பேச்சில் மட்டும் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். இன்று வழக்குகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து மகிழ்ச்சியை கூட்டும். வரன்கள் வாயில் கதவைத் தட்டும்.
தொலைபேசி வழித் தகவல் ஆனந்தத்தை கொடுக்கும்படி இருக்கும். அயல்நாட்டில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். உடல் ஆரோக்கியத்திலும் இன்றைய நாள் மிக சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் இருக்கும். காதலர்களுக்கு இன்று நாள் இனிமையான நாளாக இருக்கும். காதலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்