கடக ராசி அன்பர்களே…!! இன்று குடும்பத்தில் உள்ளவர்கள் அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறிய வாக்குவாதங்கள் ஏற்படலாம். ஆகையால் பேசும்பொழுது எதையும் புரிந்து கொண்டு பேசுங்கள். அலைச்சல்களுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்கும். பணவரவு ஓரளவு திருப்தியை கொடுக்கும். தேக ஆரோக்கியம் சீராகும்.எதிரிகள் விலகிச் செல்வார்கள். தொழில் வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதிற்கு நிம்மதியை கொடுக்கும. இன்று எந்த ஒரு விஷயத்தையும் திறமையாகவே நீங்கள் கையாளுவீர்ககள்.யார் மனதையும் புண்படுத்தாமல் மட்டும் பேசுங்கள் அது போதும்.
மற்றவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் பொழுது கொஞ்சம் கவனமாக இருங்கள். அவரிடத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதைப் பற்றியெல்லாம் பேச வேண்டாம். தொழில் முறையில் சில மாற்றங்களை நீங்கள் செய்ய முன்வருவீர்கள்.உங்களுடைய சிந்தனை திறனும் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்களில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள்ளுங்கள் மிக சிறப்பாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தியே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை ; தெற்கு
அதிர்ஷ்டமான எண் ; 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்; வெள்ளை மற்றும் நீல நிறம்