நடிகர் விஷாலின் தயாரிப்பு அலுவலகத்தில் 45 லட்சம் மோசடி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழ் திரையுலகின் சிறந்த நடிகரான விஷாலின் தயாரிப்பு அலுவலகம் சென்னை வடபழனியில் அமைந்துள்ளது. இங்கு பத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் சமீபத்தில் அலுவலக கணக்கு வழக்குகளை விஷாலின் ஆடிட்டர் சோதனை செய்தார். அப்போது அலுவலக கணக்கில் 45,00,000 ரூபாய் மோசடி செய்து இருப்பதை கண்டறிந்தார். இதனால் விஷால் பெரிதும் அதிர்ச்சி அடைந்தார்.
இதனைத்தொடர்ந்து அலுவலக மேலாளர் விஷாலின் உதவியாளருமான ஹரி துணை போலீஸ் கமிஷனரிடம் இது குறித்து புகார் கொடுத்தார். புகாரில் “தங்கள் அலுவலகத்தில் 45 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது. அதை செய்த ஊழியர் யார் என்பது தெரியவில்லை. அது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார். புகாரை பெற்ற உதவி போலீஸ் கமிஷனர் விருகம்பாக்கம் ஆய்வாளருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.