கர்ப்பமான பெண் ஒருவருக்கு வயிற்றில் இரண்டு குழந்தைகள் இரண்டு கருப்பையில் இருக்கும் தகவல் வெளிவந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது
பிரிட்டனைச் சேர்ந்த கெல்லி என்ற இளம்பெண் ஜோஷுவா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக போனதை தொடர்ந்து கெல்லி கர்ப்பமானார். இந்நிலையில் லண்டனில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் கெல்லிக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. ஸ்கேன் ரிப்போர்ட்டில் மிக பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அது கெல்லியின் வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருந்ததோடு கெல்லிக்கு இரண்டு கருப்பை இருப்பதும் தெரியவந்துள்ளது. இரண்டு கருப்பையில் இரண்டு குழந்தைகள் இருந்தன. 50 மில்லியன் பெண்களில் ஒருவருக்கு மட்டுமே இவ்வாறு இருக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து கெல்லி கூறுகையில் “ஸ்கேனில் வந்த தகவல் எனக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் மருத்துவர்கள் எனக்கு இரண்டு முறை பிரசவம் ஆகும் என கூறியுள்ளனர். இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்படும் என நான் படித்து இருந்ததால் முதலில் மிகவும் பயந்தேன். ஆனால் என்னை போன்றே இரண்டு கருப்பை கொண்ட பெண் ஒருவருடன் பேசினேன். அவர் எனக்கு தைரியம் கூறியதோடு அவருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதன் பிறகு எனக்கு இருந்த பிரசவம் பற்றிய பயம் மறைந்தது” எனக் கூறியுள்ளார்