காதலில் ஏற்பட்ட தகராறை தீர்க்க வெளியில் சென்றவர்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு தொகை விழுந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
அமெரிக்காவை சேர்ந்த கிரீல் என்ற பெண்ணிற்கும் அவரது காதலன் ஜோஸ்வா என்ற இளைஞனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீண்டு வருவதற்காக காரை எடுத்துக் கொண்டு இருவரும் வெளியில் சென்றுள்ளனர். வெகுதூரம் செல்ல முடிவு செய்தவர்கள் காருக்கு கேஸ் நிரப்புவதற்காக சென்றுள்ளனர். அச்சமயம் அங்கு லாட்டரி சீட்டுகள் விற்பதை பார்த்த கிரீல் தனது காதலனிடம் லாட்டரி சீட்டு வாங்குமாறு கூறியுள்ளார்.
ஜோஸ்வா லாட்டரி டிக்கெட் வாங்க எதிர்பாராதவிதமாக அவர்கள் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு 1,32,76,288 ரூபாய் பரிசு விழுந்துள்ளது. இதுகுறித்து கிரீல் கூறுகையில் இந்த பரிசு விழுந்தது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. எனது காதலன் ஜோஸ்வாவும் நானும் வாக்குவாதத்தில் ஈடுபட மாட்டோம் என உறுதி எடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.