நடந்தது என்ன ?
உத்திரபிரதேச மாநிலம் திக்ரு என்ற கிராமத்தில் அதிகாலை 3 மணி அளவில் உத்தரபிரதேச போலீசாருக்கு ஒரு தகவல் வந்தது. 60 குற்றங்களுடன் தொடர்புடைய துபே என்பவர் இந்த இடத்தில் ஒளிந்து இருக்காரு என்ற தகவல் வருகின்றது. அவர் மீதான எந்த குற்றமும் நிரூபித்து பெரிய தண்டனை வாங்கிக்கொடுக்க முடியவில்லை…. ஜெயிலில் போட்டால் வெளியே வந்து மறுபடியும் தப்பு பண்ணி பெரிய gangster ஆகி வலம் வருகிறார். அவரை சுற்றி துப்பாக்கி ஏந்திய கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கிறது. போலீசுக்கு குற்றவாளி என தெரிகிறது ஆனால் ஒன்றும் இதையடுத்து அவரை கைது செய்ய நினைத்த போலீசார் விக்காஸ் டூபே கிராமத்துக்குப் செல்கிறார்கள்.
போலீஸ் இங்கே வருவது முன்கூட்டியே அந்த குற்றவாளிக்கு தெரிந்து விட்டது. துபே…. போலீஸார் வராங்களா ? வரட்டும் என்னை பிடிக்கிறதுக்கு…. அப்டின்னு சொல்லிட்டு அவரு கிராமத்துக்கு நுழைவதற்கு முன்னாடி ரோட்ல தடை இருந்தது. போலீசார் பெரிய வாகனங்கள் எல்லாம் எடுத்து அப்படியே போறாங்க…. மூணு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து டிஎஸ்பி தலைமையில் போலீசார் வரும் போது…. ரோடு புல்டோசர் மூலமாக அடைக்கப்பட்டுள்ளது.
இதை பார்த்த போலீசார் கீழே இறங்கி புல்டோசர் எடுத்து ஓரமாக விட்டு அவரை கைது பண்ணிடலாம் என்று சொல்லி கீழே அத்தனை பேரும் இறங்கிய நிலையில், திடீரென்று துப்பாக்கி சத்தம்… 3 திசையில் இருந்தும், மேலே நின்று கொண்டு சரமாரியாக சுடுகின்றனர் விக்காஸ் டூபேவின் ஆட்கள். இதனால் போலீசார் சம்பவ இடத்திலேயே 8 பேர் மரணம், ரத்தம் அந்த ரோடு முழுவதும் வழிந்து ஓடுகிறது. 7 பேர் காயம் அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் மிகப் பெரிய பரபரப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. பலியானவர்கள் டிஎஸ்பி ஒருவர், சப்-இன்ஸ்பெக்டர்கள் 3 பேர், கான்ஸ்டபிள் 4 பேர் என மொத்தம் 7 பேர் பலியாகியுள்ளனர்.
வில்லன் விக்காஸ் டூபேயின் பின்னணி என்ன ?
விக்காஸ் டூபேயின் பின்னணி சினிமா பாணியில் அமைந்து இருக்கும். அதாவது ஒரு அரசியல்வாதியை ஓட ஓட விரட்டி காவல் நிலையத்திற்குள் சுட்டுக் கொன்ற வழக்கு இவர் மீது இருந்து. விசாரணைக்கு நீதிமன்றத்தில் வந்தது. ஆனால் குற்றம் நிரூபிக்கப் பட முடியவில்லை, அந்த வழக்கில் இவர் விடுதலையானார்.அரசியல் தொடர்புடைய ரவுடி விக்காஸ் டூபே . அவனை சுற்றி எப்போதுமே துப்பாக்கி ஏந்திய அடியாட்கள் இருப்பார்கள். எல்லைகளை மூடி தேடுதல் வேட்டையில் போலீஸ் ஈடுபட்டு வருகின்றனர்.
விக்காஸ் டூபேவை என்கவுண்டரில் சுட தீவிரம்:
விக்காஸ் டூபேவை கைது செய்வதற்கு சம்மந்தப்பட்ட கிராமத்த்தை சுற்றி பல கிலோ மீட்டர் தூரத்தில் எல்லைகள் மூடப்பட்டுள்ளது. செல்போன் சிக்னல் மூலம் யார் யாரிடம் தொடர்பில் உள்ளார் என போலீஸ் ஆய்வு செய்கிறது.விக்காஸ் டூபேவை என்கவுண்டரில் சுட்டு பிடிக்க பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.