சென்னை உயர் நீதிமன்றம் வரும் ஜூலை 6ம் தேதி முதல் காணொலி காட்சி மூலம் இயங்கபட உள்ளது.
கொரோனா பரவலை தடுக்க மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் மூடப்பட்டு அவசர வழக்கு மட்டும் விசாரணைக்கு எடுத்துவரப்பட்டன. அவசர வழக்கு கூட இரண்டு இரு நீதிபதிகள் அமர்வும், நான்கு தனி நீதிபதி அமர்விலும் விசாரித்தார்கள். பொதுநல வழக்கு, ஆட்கொணர்வு மனு மற்றும் முன்ஜாமீன் விசாரித்து வந்தனர். நீதிமன்ற விசாரணை துவங்கியபோது சில நீதிபதிகளுக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பரவியதால் மீண்டும் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டது.
நீதிபதிகள் தங்கள் வீடுகளிலிருந்தும், வழக்கறிஞர்கள் தங்கள் வீடுகளில் இருந்தும் வாதங்களின் பிரிவை அறிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணொலிக் காட்சி மூலமாக விசாரணை நடத்தும் போது இடையூறுகள் ஏற்படுவதாகவும், தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படுவதாகவும் வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்து வந்தனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் திறந்த நீதிமன்றத்தில் நேரடியான விசாரணை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தநிலையில் சென்னை உயர்நீதி மன்ற அனைத்து நிதிபதிகள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் ஜூலை 6 ஆம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும் புதிய மற்றும் நிலுவையிலுள்ள வழக்கை விசாரிப்பது எனவும்.
இந்த அனைத்து வழக்குகளையும் காணொலிக் காட்சி மூலமாக விசாரிப்பது என முடிவு செய்து அதன்படி இரு நீதிபதிகள் அடங்கிய ஆறு அமர்வுகளும், 27 தனி நீதிபதிகளும் வரும் ஜூலை 6ஆம் தேதி முதல் வழக்கமான நடைமுறைப்படி விசாரணை நடத்துகிறார்கள். இதே போல மதுரை கிளையிலும் இரண்டு இரு நீதிபதிகளின் அமர்வும்,9 தனி நீதிபதிகளும் வழக்குகளை விசாரிக்க இருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கு காலங்களில் அவசர வழக்குகளுக்கு மட்டுமே விசாரித்து வந்த நிலையில், ஜூலை 6ஆம் தேதி முதல் புதிய வழக்குகளுக்கு மட்டுமல்லாமல் ஏற்கனவே பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று இந்த நீதிபதிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.