ஒரு குழந்தையின் விண்ணப்பத்தை என்னால் நிராகரிக்க முடியவில்லை. ஒருவேளை குடிநீர் இணைப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படாவிட்டால் சிறுமிக்கு ஏமாற்றம்தான் கிடைக்கும். இவ்வளவு சின்ன வயதில் பெரிய ஏமாற்றமாகத் தெரியும் அதனால்தான் குடிநீர் இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன். அந்த சிறுமியை நோகடிக்க எனக்கு மனமில்லை. என்னைச் சந்திக்க வரும்போது ஹரிணி முகக்கவசம் அணியவில்லை. அதனால் அவளைச் சந்திக்கச் செல்லும்போது முகக்கவசங்களும் வாங்கிக் கொடுத்துவிட்டுவந்தேன்” என்கிறார், ஊராட்சி மன்றத் தலைவர் சம்பத்.
குழந்தையின் பிஞ்சு மனம் ஏமாந்து போகக் கூடாது என்று கருதிய சம்பத், அதற்கான நடவடிக்கைகளை எடுத்து அக்குழந்தையின் வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்கி,குழந்தையின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று குழந்தையின் குடும்பத்தார் அனைவருக்கும் முகக்கவசங்களை வழங்கியுள்ளார். அவரது இந்த செயல் அப்பகுதி மக்கள் பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக சிறுமி ஹரிணியின் தந்தை சஞ்சய் கூறிய போது, ”எங்களுடைய துன்பத்தை காண சகிக்காத எங்களுடைய மகள் ஊராட்சி மன்ற தலைவரிடம் நேரடியாகச் சென்று கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து எங்களுக்கு தெரியாது.
ஊராட்சி மன்றத் தலைவர் எங்கள் வீட்டிற்கு வந்து இதைக் கூறிவிட்டு குழாய் இணைப்பு ஏற்படுத்தித் தருவதாகச் சொன்னார். சொன்னபடி,குடிநீர் இணைப்பு கிடைக்கப்பெற்றது. தண்ணீரை விலை கொடுத்து வாங்கிய எங்களுக்கு இது மிகப் பெரிய உதவி. அவருக்கு கோடானகோடி நன்றி” என தெரிவித்துள்ளார். நான்கு வயது சிறுமியின் கோரிக்கைகளை மதித்து நான்கே நாட்களில் குடிநீர் இணைப்பை கொடுத்த ஊராட்சி மன்றத் தலைவர் உண்மையில் மிகவும் பாராட்டுக்குரியவர்.