பாலிவுட்டில் தனது பட வாய்ப்புகளை வாரிசு நடிகர்கள் தடுத்ததாக பிரபல நடிகை டாப்சி கூறியிருக்கிறார்:
ஆடுகளம் படத்தில் அறிமுக நடிகையாக டாப்சி, தனுசுடன் ஜோடியாக நடித்தார். பிறகு, அவர் வந்தான் வென்றான், வைராஜா வை,காஞ்சனா-3, கேம் ஓவர் உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்து வந்தார். இவர் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இந்தி திரைத்துறையில் இருக்கும் வாரிசு நடிகர்களால் புதிய பட ஒப்பந்தம் கிடைக்காமல் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.இது குறித்து டாப்ஸி கூறுகையில்,திரையுலகில் சில முன்னணி பிரபலங்களின் குடும்பத்தில் இருந்து வருபவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைப்பதனால், எளிதில் சினிமா வாய்ப்புகளை பெறுகிறார்கள்.
ஆனால் வெளியினில் இருந்து வரும் நடிகர், நடிகைகள் பல பிரபலங்கள் மூலம் அறிமுகமாகி தொடர்புகளை உருவாக்கிக்கொள்ள அதிக நாட்கள் தேவைப்படுகின்றன.அவ்வாறு தொடர்புகள் கிடைத்தாலும் வெளியிலிருந்து வரும் நடிகர்களுக்கு வாய்ப்புகள் கொடுப்பதை விட தனக்கு தெரிந்தவர்களை வைத்தே இயக்குனர்கள் நடிக்க வைக்கின்றனர். பிரபலங்களின் வாரிசுக்களுக்கு அதிக பட வாய்ப்புகள் கொடுக்கப்படுவதால் நான் பட வாய்ப்புக்களை இழந்து வேதனைப்பட்டேன். இதுபோன்ற குளறுபடிகள் திரைத்துறையில் ஏற்படுவதற்கு ரசிகர்களும் ஒரு வகையில் காரணமாக இருக்கிறார்கள்.ஏனென்றால், சினிமா குடும்பத்தில் இருந்து அறிமுகமாகிறவர்களின் படங்களை பார்க்கவே அவர்கள் ஆர்வமளிக்கிறார்கள் ஆனால், மற்றவர்களின் படங்களை பார்க்க மறுக்கின்றனர் என டாப்சி கூறினார்.