Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…மன உறுதி அதிகரிக்கும்…தடைகள் நீங்கும்…

மேஷ ராசி அன்பர்களே …!   இன்று முன்னேற்றம் அதிகரிக்க முக்கிய புள்ளிகளை சந்திக்கும் நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேற்கொள்வீர்கள். சீக்கிரம் செய்து முடிக்க வேண்டும் என்று எதிலும் நிதானம் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டாம், பொறுமையாக இருங்கள். அலட்சியம் காட்டாமல் காரியங்களை எதிர்கொள்ளுங்கள்.

சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். அலைச்சல் கொஞ்சம் உண்டாகலாம். மேல்மட்டத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை கொடுக்கலாம். மன உறுதியும் அதிகரிக்கும். சொத்துகளை அடைவதில் இருந்த தடைகள் நீங்கும். உயர்நிலையில் உள்ளவர்களிடம் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். இன்று  காதலர்களுக்கு இனிமை காணும் நாளாக இருக்கும்.

புதிதாக காதல் வயப்பட கூடிய சூழலும் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்துமே நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |