மிதுன ராசி அன்பர்களே….! இன்று காலையிலே நல்ல தகவல்கள் வந்து சேரும் நாளாக இருக்கும். வியாபாரம் ஓரளவுக்கு வெற்றியும் உண்டாகும். இன்று உங்களுக்கு சந்தேகம் தினம் உள்ளதால் எதையும் பொறுமையாக தன் செய்யவேண்டியிருக்கும். யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். நிதி மேலாண்மையில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். உடன்பிறப்புகள் வழியில் ஏற்பட்ட உபத்திரவம் கொஞ்சம் கொஞ்சமாக மாறும்.
வழக்குகளில் ஓரளவு வெற்றி வாய்ப்புகள் இருந்தாலும் இன்று சில விஷயங்களைச் செய்யும்போது கவனமாக தான் செய்ய வேண்டிய திருமண முயற்சி ஓரளவு வெற்றியைக் கொடுக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஓரளவு நல்ல முடிவை கொடுக்கும். உழைப்புக்கு ஏற்ற சலுகை கிடைக்கும். எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது எப்போதுமே நல்லது. பணவரவு எதிர்பார்த்தபடி இருக்காது கொஞ்சம் காலதாமதம் ஏற்படலாம். சிறிய குழப்பங்கள் தலைதூக்கும். நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக செய்தால் வெற்றி என்பது கண்டிப்பாக உண்டு.
புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். காதலர்கள் இன்று அவசரப்படாமல் பேசுவது நல்லது. பேச்சை குறைத்துக் கொண்டால் இந்த நாள் மிகவும் சிறப்பாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் ஓரளவு நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்.