Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்…சிந்தனை மேலோங்கும்…!

கடக ராசி அன்பர்களே …!  இன்று புதிய பாதை புலப்படும் நாளாக இருக்கும். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். தன வரவு திருப்திகரமாக இருக்கும். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணங்கள் மேலோங்கும். நண்பர்களுடன் இன்று வெளியிடங்களுக்குச் சென்று பொழுதைக் கழிப்பீர்கள். சிலர் பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்கலாமா என்று சிந்தனை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும்.

வாகனங்கள் மூலம் செலவு கொஞ்சம் உண்டாகலாம்.  வீட்டுக்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மனை வாங்குவதற்கு உண்டான தடைகள் அகலும். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர் தொடர்பு ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |