Categories
உலக செய்திகள்

வாய்க்கு வந்ததை பேசும் இம்ரான்…. வம்படியா சீண்டும் பாகிஸ்தான் … எரிச்சலான இந்தியா….

பாகிஸ்தான் கராச்சியில் அமைந்துள்ள பங்குச் சந்தையில் பயங்கரவாதிகளின்  தாக்குதலால்,ஆயுதம் வைத்திருந்த நான்கு பிரிவினைவாதிகள் உள்ளிட்ட  11 பேர் கொல்லப்பட்ட்டுள்ளனர்.

இச்சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறுகையில் இதற்கு காரணம் இந்தியா என்பதில் தனக்குச் சந்தேகம் ஏதுமில்லை என குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசுகையில் , “மும்பையில் என்ன நடந்ததோ, கராச்சியில் அதை நடத்த இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர். நிச்சயமற்ற தன்மையை பரப்ப அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.

இந்தப் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் இந்தியா உள்ளது என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. உளவுத் துறை அமைப்புகள் எச்சரிக்கையாக இருப்பதை எனது அமைச்சர்கள் அறிவார்கள். நான்கு இடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாகவும், அதில் இரண்டு இடங்கள் இஸ்லாமாபாத்தைச் சுற்றியிருப்பதாகவும் தகவல் வந்தது” என்று அவர் கூறியுள்ளார்.

இந்தப் பயங்கரவாத தாக்குதலுக்குப் பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்துடன்  தொடர்பில் உள்ள மஜீத் பிரிகேட்பொறுப்பெடுத்துள்ளதால் இந்த விவகாரத்தில் தலையிடும் சீனா, நாட்டினுடைய பொருளாதாரம் இவற்றை  கணக்கில் கொண்டே தாக்குதல் நடைபெற்றது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகளை ஊக்குவிப்பது பாகிஸ்தான் என்று உலக நாடுகளே குற்றம் சாட்டி வரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவை சாட்டியுள்ளது எரிச்சலை கிளப்பியுள்ளது.

Categories

Tech |