கும்ப ராசி அன்பர்களே …! இன்றைய நாள் காரிய வெற்றி ஏற்படும் நாள் ஆக இருக்கும். சேமிப்பு அதிகரித்தாலும் செலவுகள் உண்டாகலாம். உடல் நலம் சீராகும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு சாதகமான சூழ்நிலைகள் அமையும். புதிய ஆடை ஆபரண சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு வரன் தேடும் விஷயங்களில் வெற்றி கிட்டும்.
எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். துணிச்சலாக சில முக்கியமான பணிகளில் ஈடுபடுவீர்கள். தேவியின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். சிறு தொகையையும் நீங்கள் செலவிட நேரிடும். இன்று கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும்.
காதலர்களுக்கும் இன்று இனிமையான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் வெள்ளை நிறம்.