மீன ராசி அன்பர்களே…! இன்று விருப்பங்கள் நிறைவேறும். காரியத்தில் வெற்றி ஏற்படும். சேமிப்பு அதிகரித்தாலும் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். நண்பர்களால் ஆனந்தத்தை ஏற்க கூடும். நல்லவர்களின் தொடர்பு உங்களுக்கு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். பூர்வீக சொத்துப் பிரச்சினை அகலும். வாக்கு வன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டியிருக்கும். செலவு கொஞ்சம் கூடும். மற்றவர் பிரச்சனையில் தயவுசெய்து தலையிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
தொழில் வியாபாரம் நிமித்தமாக வெளியூர் பயணம் செய்வதாக இருந்தால் ரொம்ப கவனமாக செல்லுங்கள். வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பொருமையாக செல்லுங்கள் வேகம் வேண்டாம். லாபத்திற்காக கடுமையாக உழைப்பீர்கள். மந்தமான சூழ்நிலை நிலவி இருந்தாலும் பின்னர் எந்த ஒரு பிரச்சனையும் சமாளிக்ககூடிய ஆற்றல் இருக்கும். எதிலும் கோபமே உங்களுக்கு உருவாகும். கோபத்தை மட்டும் கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு தங்கள் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
இன்று காதலர்களுக்கு ஓரளவு இனிமை காணும் நாளாக இருக்கும். புதிதாக காதலில் வயப்படக்கூடிய சூழலும் இருக்கும். காதலுக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. கருநீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: கரு நீலம் மற்றும் வெள்ளை நிறம்.