Categories
சினிமா தமிழ் சினிமா

போதும்டா சாமி…..எதுக்குடா பொண்ணா பொறந்தோம்னு இருக்கு…. சின்மயி வேதனை …!!

போதும்டா சாமி என்று பிரபல பின்னணி பாடகியாக வலம்வரும் சின்மயி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வேதனையோடு பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பரபரப்பான கொரோனா வைரஸ்  ஒரு பக்கம் இருக்கையில் மற்றொரு பக்கம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை குறித்த செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அறந்தாங்கி பகுதியில் 7 வயதே ஆன சிறுமி ஜெயப்பிரியாவிற்கு, பாலியல் வன்கொடுமையால்  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது .இதனையடுத்து தமிழக திரைத்துறையினர் பலர் ஜெயப்பிரியாவிற்கு நடந்த அநீதிக்காக குரல் எழுப்பினர்.

ஜெயப்பிரியாவின் கொடூரச்சம்பவத்தை குறித்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும்  மீள்ளாத நிலையில், அடுத்ததாக  சசிகலா என்ற பெண் குளிக்கும் போது இரண்டு சகோதரர்கள் சேர்ந்து ஆபாசப்படங்களை எடுத்து அவரை கடந்த 4 ஆண்டுகள் ஆக மிரட்டி பாலியல் துன்புறுத்தல்  செய்துவந்ததால்  ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் எல்லை மீறியதனை ஒட்டி அப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

ஜெயப்பிரியாவின் கொலையும் அடுத்து சசிகலாவின் கொலையும் சேர்த்து நீதி வழங்க வேண்டும் என்று  திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில் முன்னணி பாடகி சின்மயி, ‘போதும்டா சாமி! எதுக்காக பொண்ணா பிறந்தோம்ன்னு தோணுது’ என்று மிகவும் வேதனையோடு பதிவு செய்துள்ளார். பாடகி சின்மயின் ட்விட்டர் பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |