இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் சுதந்திர தின வாழ்த்து கூறியதின் காரணமாக தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார் அதிபர் டொனால்டு டிரம்ப்.
1770-ம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்த நியூஜெர்சி, தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா ஜார்ஜியா போன்ற 13 குடியேற்ற அட்லாண்டிக் கடல்பகுதிகள் விடுதலை பெற்று. அமெரிக்கா இம்மாநிலங்களுடன் இணைந்து தனி நாடாக மாறியது.இந்த மாற்றத்தின் காரணமாக அமெரிக்காவின் சுதந்திர தினம் ஜூலை 4 ஆம் தேதி வருடம் தோறும் கொண்டாடி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இன்று அமெரிக்காவின் 244-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இந்தியநாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு டுவிட்டரில் வாழ்த்து பதிவிட்டிருந்தார்.
அதில் அவர் கூறியது,” அதிபர் டிரம்பிற்கும் அமெரிக்க மக்களுக்கும் 244-வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக, இந்த நாளில் சுதந்திரத்தையும் மனிதத்தையும் மதித்து கொண்டாடுகிறோம்’’ என பதிவிட்டிருந்தார்.இந்திய பிரதமர் மோடியின் சுதந்திர தின வாழ்த்து பதிவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்து மோடி அனுப்பிய செய்திக்கு பதில் செய்தியாக, ”நன்றி எனது நண்பரே… இந்தியாவை அமெரிக்கா விரும்புகிறது’’ என பதிலளித்துள்ளார் .