நேற்று காஷ்மீரின் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் இருக்கும் அர்ராஹ் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து ராணுவத்தினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் இரண்டு பேர் ஒரு வீட்டில் பதுங்கியிருந்து திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ள 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை கொடுத்து வருகின்றனர். மேலும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கின்றனரா என்பதை அறிந்துகொள்ள தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகின்றது.