Categories
உலக செய்திகள்

இரும்பு மனுஷி ஜோதி…. வன்புணர்வு செய்யப்பட்டு கொலையா ? பரபரப்பு தகவல் ..!!

ஊரடங்கு காலத்தில் 1200க்கும் மேல் பல கிலோ மீட்டர் தாண்டி தன்  தந்தையை சைக்கிளில் 7 நாள் பயணம் மேற்கொண்டு அவர்களின் கிராமத்தை சேர்ந்த ஜோதி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என காட்டுத்தீயாய் பரவி வரும் தகவல் உண்மையல்ல என தெரியவந்துள்ளது.

ஆட்டோ ஓட்டி தனது பிழைப்பை பார்க்கும் ஜோதியின் தந்தை மோகன் பஸ்வானுக்கு ஊரடங்கு  நேரத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. கடும் வறுமை வாட்டிய நிலையில் தனது தந்தையை சொந்த ஊருக்கு கூட்டிச் செல்ல நினைத்துள்ளார் எட்டாம் வகுப்பு பயின்று வரும் சிறுமி ஜோதி குமாரி. இதையடுத்து தங்களிடமிருந்த சிறிதளவு காசை வைத்து ஒரு சைக்கிளை வாங்கி அவர்கள் வசிக்கும் கிராமத்திலிருந்து 1200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பீகாரில் உள்ள தங்கள் கிராமத்திற்கு மகளும் தந்தையும் கடந்த பத்தாம் தேதி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சிறுமி ஜோதி காயமடைந்த தனது தந்தையை பின்னால் இருக்கையில் வைத்து கையில் ஒரு பையுடன் ஏழு நாட்களாக தொடர் பயணம் மேற்கொண்டு கடந்த 16ம் தேதி தங்களது சொந்த ஊரை அடைந்துள்ளனர். பயணத்தின்போது சிறிது ஓய்வு உணவு என எடுத்துக்கொண்டு தனது தந்தை மோகனை பத்திரமாக கொண்டு  சேர்த்துள்ளார் இரும்பு மனுஷி  சிறுமி ஜோதி. இந்த தகவல் இந்தியா மட்டுமில்லாமல் உலக அளவில் எல்லா இடங்களிலும் பரவி பாராட்டுக்களை பெற்றுவந்தது.

தற்போது இந்த சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக  இச்சிறுமியின் படத்துடன் பலர் டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அது உண்மையான தகவல் இல்லை என இப்போது தெரியவந்துள்ளது. இச்சிறுமியின் பெயரும் ஜோதி என்பதால் தவறாக அவரின் புகைப்படம் பரவி வந்துள்ளது. யார் அந்த சிறுமி ? மாம்பழங்களை திருடி சாப்பிட்ட குற்றத்துக்கு வன்கொடுமை முறையில் கொலை செய்யப்பட்டுள்ள 14 வயது சிறுமி தான் ஜோதி. இதில் குற்றவாளி அர்ஜுன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். இக்கொலை வழக்கில் அர்ஜூனின் மனைவியும் குற்றவாளி என கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |