காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அருகில் இருக்கின்ற மாவட்டமாக இருப்பதான் காரணமாக கொரோனாதொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை கொரோனா வைரஸால் கிட்டத்தட்ட 2404 பேர் வந்து பாதிக்கப்பட்டு இருந்தார்கள். தற்போது 146 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 2550ஆக உயர்ந்துள்ளது. 926 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கிறார்கள்.
1594 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று வரை கொரோனா பாதித்த 5 பேர் உயிர் இழக்கிறார்கள். காஞ்சிபுரம் பெருநகர் பகுதியில் 75 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கின்றது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 20 பேரும், பாலாஜா பகுதியில் 5 பேரும், உத்திரமேரூர் பகுதியில் 5 பேரும், குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதியில் மீதமுள்ளோர் பாதிக்கப்படுகின்றனர்.