கொரோனா உயிரிழப்பில் நாம் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் குறைவு என்றும், யாரும் பயப்பட வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசியுள்ளார.
சென்னையில் கொரோனா அதிகரித்து வருவது குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், தற்போது டெஸ்ட் எண்ணிக்கையில் அதிகமாக சோதனை நடக்கிறது. சென்னையில்தான் இதுவரை 66 ஆயிரம் பாசிட்டிவ் நபர்களை கண்டறிந்து, அதில் 40 ஆயிரம் நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இதுபோன்று ஊரடங்கு அரசின் நடவடிக்கைகள் இல்லாமல் இருந்திருந்தால் இழப்புகள் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும். மற்ற நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் சென்னை மாநகரில் இறப்புகள் எண்ணிக்கை கொஞ்சம் குறைவுதான். கர்நாடகா, டெல்லி, கொல்கத்தா இவற்றுடன் ஒப்பிடும்போது நமது மாநிலத்தில் இழப்புகள் எண்ணிக்கை குறைவுதான்.
சென்னையில் மட்டும் தான் கொரோனா தொற்று அதிகம் உள்ளது. வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் இருந்து விமானங்கள் மூலம் வருவோரை நம்மால் தடுக்க முடியாது. ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் லாரிகள் சென்று கொண்டிருக்கின்றன. அவர்களையெல்லாம் சோதனைக்கு உட்படுத்த முடியாது. எனவே அவர்களால் தொற்று வர அதிக வாய்ப்பு உள்ளது. சோதனைகள் 2 லட்சத்திற்கும் மேல் நடத்தப்பட்டாலும் நாளுக்கு நாள் ஏற்றுமதி-இறக்குமதி என்ற பெயரில் அதிக வாகனங்களை இயக்க வேண்டியிருக்கிறது. இதனாலும் தொற்று பரவ காரணம் உள்ளது. இருந்தாலும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகம் அடைந்து வருகிறது.
மக்களிடையே பய உணர்ச்சி வேண்டாம், மக்கள் அரசு நடவடிக்கைகளை பின்பற்றி வெளியில் செல்லும்பொழுது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி நடந்தாலே தொற்றிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். இளைஞர்களிடம் இது சம்பந்தமான வழிகாட்டுதல்கள் மேலோங்கும் போது தொற்றை குறைக்கமுடியும். இறப்புகளை குறைப்பதற்காக நிறைய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இனிவரும் காலங்களில் தொற்றுநோய் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.ஒரு நாளைக்கு 11,000 பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இதனை 13,000 ஆக மாற்ற தயாராக உள்ளது நம் அரசு.