Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய(06.07.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

06-07-2020, ஆனி 22, திங்கட்கிழமை.

இராகு காலம்-  காலை 07.30 -09.00

எம கண்டம்- 10.30 – 12.00

குளிகன்- மதியம் 01.30-03.00.

நாளைய ராசிப்பலன் –  06.07.2020

மேஷம்

உடல் ஆரோக்கியம் சிறப்படைந்து சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிலருக்கு பதவி  உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலம் உண்டு.

ரிஷபம்

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகலாம். எந்த செயலிலும் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் உதவிகள் இருப்பதால் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

மிதுனம்

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும். தொலைதூரப் பயணங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

கடகம்

பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்தால் லாபம் அதிகரிக்கும்.

சிம்மம்

குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகம் தொடர்பான வெளிவட்டார நட்பு கிடைக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலம் உண்டு. கொடுக்கல்-வாங்கல் லாபகரமாக இருக்கும்.

கன்னி

எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். எந்த காரியத்தையும் சிந்தித்து செய்வது நல்லது. வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை கொடுக்கும்.

துலாம்

குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் தொடர்பாக சில தடைகள் இருந்தாலும் லாபம் உண்டு. பலவீனமாக காணப்படுவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் வெளி தொடர்புகள் மூலம் அனுபவம் உண்டு.

விருச்சிகம்

வீட்டிற்கு புதிய பொருட்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அவர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றியை கொடுக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

தனுசு

வியாபாரத்தில் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடலாம். குடும்பத்திலுள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

 

மனதிற்கு புது தெம்பு உண்டாகும். வெளியே செல்லும் வாய்ப்புகள் உண்டு. நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொருள் சேரும், சொத்து தொடர்பான பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி உண்டாகும். கொடுக்கல்-வாங்கல் லாபகரமாக இருக்கும்.

கும்பம்

வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். குடும்பத்தில் பெற்றோரின் மனஸ்தாபங்கள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இதுவரை இருந்த கடன் பிரச்சனைகள் நீங்கும்.

மீனம்

தன வரவு சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் நண்பர்கள் ஒற்றுமையாக  செயல்படுவீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

 

Categories

Tech |