தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்து மக்களை அதிர வைத்துக் கொண்டிருக்கின்றது. தலைநகர் சென்னை கொரோனா தொற்றில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக தலைநகர் சென்னையை போலவே மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகின்றது. இதனால் தினம்தோறும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,500, 3000, 3,500 என்று உயர்ந்து நேற்று 4,280 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகின்றது.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எப்படி உயர்கின்றது ? அதற்கு இணையாக குணமடைந்து வீடு திரும்புவார் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களுக்கு பெருத்த நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று வரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 60,604 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றார்கள்.
இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரம் வெளியானது அதில், தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று ஒரே நாளில் 60 பேர் உரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,510-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2,186-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை கொரோனா பாதித்த 62,778பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.இதனால் தற்போது வரை 46,860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.