Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கொரோனா பணி” இளம்பெண்ணிடம் ஆபாச பேச்சு…. போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்….!!

சென்னையில் 20 வயது இளம் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

சென்னை ஆர்கே நகர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் ஜோசப். இவர் நேற்று காலை அண்ணா நகர் 6-வது தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீடு வீடாக சென்று அறிகுறிகள் ஏதும் இருக்கிறதா? என கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த 20 வயது இளம் பெண் ஒருவரிடம், போலீஸ் ஏட்டான ஜோசப் சென்று அவரது தொலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டு இவரது எண்ணையும் கொடுத்துள்ளார்.  பின் அவருக்கு கால் செய்து தொடர்ந்து என்னோடு பேசுமாறு தொந்தரவு கொடுத்துள்ளார்.

ஒரே நாளில் பல முறை கால் செய்து அவரை வேலை செய்ய விடாமல் தடுத்ததால், மன உளைச்சல் அடைந்த அவர் பணி செய்து கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்தார். இதையடுத்து சக ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின் இளம்பெண்ணிடம் சக ஊழியர்கள் நடந்தது என்ன என்பது குறித்து கேட்க, அவர் உண்மையை கூறிய பின் மாநகராட்சி உயர் அதிகாரியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு பின், ஆர்கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் போலீஸ் ஏட்டான ஜோசப்பிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் அந்த பெண்ணிற்கு அடிக்கடி கால் செய்து தொந்தரவு செய்ததும், ஆபாசமாக பேசியதும் தெரிய வந்ததை அடுத்து அவர் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். உயிரை பணையம் வைத்து குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட இளம்பெண்ணிடம் காவல்துறை அதிகாரி இப்படி நடந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |