சிம்ம ராசி அன்பர்களே…! இன்று நண்பர்களின் நட்பு உதவி கிடைக்க அரசியல் மற்றும் பொது சேவை மூலமாக லாபத்தை ஈட்டுவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரப் போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
மேல் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி எல்லோரும் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுப்பார்கள். ஆனால் யாரிடமும் நிதானமாக பேசுவது தான் நல்லது. கணவன் மனைவிக்கு இடையே சங்கடத்தின் நிலை நீடிக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.
இன்று காதலில் மட்டும் கொஞ்சம் நிதானமாக அனைத்து விஷயங்களையும் கையாளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டைமேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: இளம் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்