எம்சிஏ படிப்பை மூன்று ஆண்டில் இருந்து 2 ஆண்டாக மாற்ற்றியது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம். பல்கலைக்கழக அனுமதி குழு ( யுஜிசி ) ஒப்புதலையடுத்து 2020 – 2021 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் படிப்பாக மாற்றம்.எம்சிஏ வில் சேர பிசிஏ, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அதற்கு சமமான படிப்பு படித்திருக்க வேண்டும்.
பிகாம், பிஸ்சி, பிஏ, படித்தவர்கள் பிளஸ் 2வில் கணிதத்தை பாடமாக படித்திருக்க வேண்டும். எம்.சி.ஏ படிப்பு இரண்டாண்டாக மாற்றப்பட்டுள்ளதால் பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்பட உள்ளது.யு.ஜி படிப்பில் 50 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும், பட்டியல் சமூகத்தினர் 45 சதவீத மதிப்பெண் எடுத்து இருக்கலாம்.