Categories
உலக செய்திகள்

அணில், எலியை சாப்பிடாதீங்க….. சீனாவில் பரவும் புதிய தொற்று…. உயிரை கொல்லும் அபாயம் …!!

சீன மருத்துமனை ஒன்றிலிருந்து புபோனிக் பிளேக் நோய் பரவல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மங்கோலிய சுயாட்சி பகுதியில் உள்ள பயனுள் மருத்துவமனையில் 3ஆம் நிலை தொற்று பரவல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசு நாளிதழில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதி வரை இந்த எச்சரிக்கை தொடரும் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மனிதர்களிடம் வேகமாக பரவக்கூடிய பிளேக் பெருந்தொற்று காரணமாக இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பொதுமக்கள் தங்களை சுயமாக பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலை எலி, அணில் வகையை சேர்ந்த மர்மூத் என்ற விலங்குகளின்  மீது ஈக்கள் மூலமாக இந்த தொற்று பரவுகிறது. மர்மூத் இறைச்சியை உண்டதால் இந்நோய் தொற்று பரவியதாகவும், யாரும் இனி எலி, அணில், மர்மூத் போன்ற கொரி விலங்குகளின் இறைச்சியை உண்ண வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்று 24 மணி நேரத்தில் மனிதனை கொள்ளக் கூடியது என்றும் உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |