மத்திய பிரதேசத்தில் ஒரு மாணவி நாள்தோறும் 24 கி.மீட்டர் சைக்கிளில் சென்று 10ஆம் வகுப்பு படித்ததுடன், 98.5% மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலம் பிந்த் மாவட்டத்திலுள்ள அஜ்னால் என்ற கிராமத்தில் வசித்து வந்த ரோஷினி பதாரியா (Roshni Bhadauria) என்ற 15 வயது சிறுமி 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய வீட்டின் அருகே பள்ளிக்கூடம் இல்லை. இதன் காரணமாக 24 கிலோ மீட்டர் தூரம் சென்று படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் அந்த சிறுமி..
இருப்பினும் படிப்பதற்காக ரோஷினி சிறிதும் மனம் தளராமல் நாள்தோறும் 24 கிலோ மீட்டர் சைக்கிளில் சென்று சுறுசுறுப்பாக பாடம் கற்று வந்தார்.. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் நடந்து முடிந்தது.. இந்நிலையில் நேற்று முன்தினம் 10ஆம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் மாணவி ரோஷினி 98.5 சதவீதம் மதிப்பெண் பெற்று 8ஆவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்..
கடினமாக உழைத்தால் ஊதியம் நிச்சயமுண்டு என்பதற்கு மாணவி ரோஷினி உதாரணமாக இருக்கிறார். இதுபற்றி சாதனை நிகழ்த்திய அந்த மாணவி கூறுகையில் ‘‘அரசு வழங்கிய சைக்கிள் மூலம் நான் நாள்தோறும் பள்ளிக்கு சென்று வந்தேன்.. நான் தினமும் 4 1/2 மணி நேரம் படிப்பேன். வருங்காலத்தில் ஐ.ஏ.எஸ் படிக்க நான் விரும்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.