ராஜஸ்தான் மாநிலம், பாரத்பூர் அருகேயுள்ள கிராமத்தின் பட்டியலினத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த சில தினங்களாக கடுமையான வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் உடனடியாக அப்பகுதியிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 17 வாரங்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறியதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட அந்த சிறுமி வயலுக்கு செல்லும்போது, அதே பகுதியைச் சேர்ந்த சதாம், தவ்பிக் மற்றும் மம்மன் ஆகியோர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.. இதையடுத்து, குற்றவாளிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.