ஆகஸ்ட் 15ஆம் தேதி கொரோனா தடுப்பு ஊசி விற்பனைக்கு வந்துவிடும் என்ற செய்தி பொய்யானது என ICMR விளக்கம் அளித்துள்ளது.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. எனவே இதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல நாடுகளும் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலும் கோவாக்சின் என்ற மருந்து இதற்கு பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டதுடன், வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என ICMR தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
தற்போது இந்த செய்தியை மறுத்து ஐ சி எம் ஆர் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் கோவாக்சின் தடுப்பு மருந்து விற்பனைக்கு வந்துவிடும் என ICMR தெரிவித்ததாக செய்திகள் பரவின. ஆனால் அது உண்மை அல்ல. கோவாக்சின் தடுப்பு மருந்தை மனித உடலில் செலுத்தி பரிசோதிக்கும் முறையை ஆகஸ்ட் 15 க்குள் விரைந்து துரிதமாக முடிக்க வேண்டும் என்றுதான் தெரிவிக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.