தூத்துக்குடி மாவட்டசிபிசிஐடி அலுவலகத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது.
சாத்தான்குளத்தில் காவல் நிலையத்தில் தந்தை – மகன் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இந்த நிலையில் இது குறித்த விசாரணைக்காக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவர் ஆஜர் ஆகி இருக்கின்றார். சம்பவத்தன்று காவல் நிலையத்தில் பணியில் இருந்த கணபதி என்பவரிடம் மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது.
சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றார். இந்த வழக்கில் இவர்களது சாட்சியம் மிக முக்கியமானதாக பார்க்கப்படும். ஏனென்றால் அந்த நேரத்தில் இவர்களும் சேர்ந்து தாக்கியதாகதான் சொல்லப்படுகின்றது.இந்த விவகாரத்தை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காவல் நிலையத்தில் இருக்கும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.