Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் நவம்பர் வரை அதிரடி – பொதுமக்கள் மகிழ்ச்சி …!!

 தமிழகத்தில் ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலை இன்றி அரிசி என்பது வழங்கப்படும் என்று தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது.

நவம்பர் மாதம் வரை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார். அதனை கருத்தில் கொண்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில்

-வழங்கப்பட்ட அரிசி அளவின்படி நவம்பர் மாதம் வரை விலை இன்றி அரிசி வழங்கப்படும் என்று தற்போது முதலமைச்சர் தனது ஆணையின்  மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ரேஷன் கடைகளில் விலை இன்றி பொருட்கள் என்பது வழங்கப்பட்டு வரக்கூடிய நிலையில் தற்போது அரிசி விலையின்றி நவம்பர் மாதம் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |