புதுச்சேரியில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தற்போது 1000 கடந்து இருக்கிறது .
புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்க்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 20 நாட்களாக சராசரியாக 30 முதல் 40 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று வரை 946 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில். இன்று புதிதாக 65 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மொத்த எண்ணிக்ககை 1011 ஆக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் வெளியே செல்லும் போது கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். என்று மத்திய சுகாதாரதுரை அமைச்சர் கூறியுள்ளார்.