Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு

முடியாத காரியம் ஏதும் இல்லை….. நிரூபித்து காட்டிய தல…..!!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக பலரும் செயல்பட்ட நிலையில் தனக்கென முத்திரையை வான்னுயரே எட்டிப்பார்க்க வைத்த நட்சத்திரம் தான் எம்.எஸ் தோணி வேறு எவரும் பெற்று தராத வெற்றியை ஒரு கேப்டனாக இந்திய அணிக்கு பெரும் அளவில் பெற்று தந்த கூல் கேப்டன் எம்.எஸ் தோனி. கிரிக்கெட் மைதானத்தில் 7- என்ற எண் கொண்ட உடையை பார்த்ததும் ரசிகர்கள் மனதில் நினைவிற்கு வருவது இந்திய அணியின் முன்னால் கேப்டனும், அதிரடி பேட்ஸ் மேனனான எம்.எஸ் தோனி தான். எம்.எஸ் என செல்லமாக அழைக்கப்படும் இவரது முழுப்பெயர் மகேந்த்ர சிங் தோனி. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த 1981- ஆம் ஆண்டு இதே நாளில் தான் உதயமானார்.

தொடக்கத்தில் கால்பந்து விளையாட்டில் நாட்டம் கொண்ட அவர் பள்ளியில் படிக்கும்போதே மாவட்ட அளவிலான போட்டிகளிலும் தேர்வானார். கால்பந்து கோல்கீப்பராக சிறப்பாக செயல்பட்ட எம்.எஸ் தோனியை  அவரது பயிற்சியாளர் ” பேனர் ஜி ” கிரிக்கெட் விளையாடும்படி அறிவுறுத்தினார். இதனையடுத்து கோல்கீப்பர் அனுபவத்தை பயன்படுத்தி கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பராக தனது அத்தியாயத்தை தொடங்கினார் எம்.எஸ்.தோனி. முழுமுயற்சியும், பேரார்வம் கொண்டு ஒரு செயலில் ஈடுபட்டால் முடியாத காரியம் ஒன்றுமில்லை என்று எடுத்துக்காட்டுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார் எம்.எஸ்.தோனி.

Categories

Tech |