Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காதுல தொங்க போட்டுகிறாங்க…. ஏன் இப்படி இருக்காங்க ? ராதாகிருஷ்ணன் வேதனை …!!

வீட்டுக்கு வீடு சென்று கொரோனா பரிசோதனை செய்கின்றோம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் கொரோனா சிகிச்சை மையங்களை சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ண ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும் போது,  கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வைத்து அதிகம் குறைவு என்று கணக்கிட கூடாது. தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டல் என்னவென்றால் ? பரிசோதனையை அதிகமாக செய்ய வேண்டும். தமிழகத்தில் தான் நாம் அதிகமான சோதனை செய்து,  காய்ச்சல் இருப்பவர்கள் அல்லது ஏதாவது ஒரு அறிகுறி இருந்தாலும் அவர்களை கொரோனா நோயாளியாக எடுக்கின்றோம்.

அதே போல முகாம் அமைத்து தனிமைப்படுத்தப்பட்டோருக்கு சிகிச்சை கொடுத்து , அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு பரவ கூடாது என்ற ஏற்பாடு செய்கிறோம். தேவையான மருத்துவ கட்டமைப்பு செய்து வருகின்றோம். மதுரையை பொருத்தவரை மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன், மாவட்ட ஆட்சியர், ஜேடி,டிடி, உள்ளாட்சி அமைப்பு,   உள்ளூர் அமைச்சர்கள், கண்காணிப்புக்கு சந்திரமோகன் ஐஏஎஸ் என இவர்கள் அனைவரும்  சேர்ந்து மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்துகின்றோம்.ஏற்கனவே அதிக படுக்கைகள் இருக்கிறது. இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு படுக்கை ஏற்பாடு செய்வது இந்த மாதிரி நடவடிக்கை எல்லாம் செய்கின்றோம்.

மதுரையில் நேற்று இரவு நான் வந்த பிறகு… கொஞ்சம் பார்க்கும்போது பொதுமக்கள் மாஸ்க் போடாததை பார்க்க முடிகின்றது. நிறைய ஏரியாவுல மாஸ்க்கை கீழே இறக்கி கழட்டி வைக்கிறாங்க இல்லனா காதுல தொங்க போட்டுகிறாங்க. பெரும்பாலானவர்கள் மாஸ்க் போட்டாலும், சிலருக்கு இந்த பழக்கங்கள் மாறாமல் இருக்க கூடிய நிலை. அதற்கு ரொம்ப  விழிப்புணர்வு மற்றும் ஒழுங்கு படுத்தும் பணி செய்யவேண்டும். அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இந்த மாதிரி நடவடிக்கையை மேற்கொள்கிறோம்.

கொரோனா தடுப்பு சிகிச்சை மையங்களில் உணவு தரம் மற்றும் மருத்துவம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் செய்து கொண்டு இருக்கின்றோம். அதை அனைத்தையும் ஆய்வு செய்கின்றோம். ஒவ்வொரு ஏரியாவுக்கும் சென்று வீட்டுக்கு வீடு சென்று பரிசோதனை செய்கின்றோம். தமிழ்நாடு முழுக்க மொபைல் மெடிகல் கேம்ப் போன்றவை பயன்படுத்தி வருகின்றோம்.  கிராமப்புறத்தில் முகாம் வசதி செய்துள்ளோம்.

Categories

Tech |