மேஷ ராசி அன்பர்களே …! இன்று அறிமுகம் இல்லாதவரிடம் அதிகமாக பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் உருவாகிற இடையூறு தாமதமின்றி சரி செய்ய வேண்டும். பணவரவு சுமாராகவே இருக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். இன்று மனகஷ்டம், பணக்கஷ்டங்கள் ஓரளவு தீரும். சிலருக்கு வசதி வாய்ப்புகள் பெருகும். உடல் உபாதைகள் மட்டும் அவ்வப்போது கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.
எல்லா பிரச்சனைகளும் நீங்கி சுமூகமான நிலையை உண்டாக்கும். எதிரிகள் தொல்லை குறையும். வியாபாரம் தொழில் ஆகியவற்றில் ஏற்பட்ட தொய்வு நீங்கும். இன்று என்னால் ஓரளவு அதிர்ஷ்டம் மிக்க நாளாகவே இருக்கும். உறவினர் வகையிலும் உதவிகள் கிடைக்கும். மற்றவரிடம் உரையாடும் பொழுது எப்பொழுதும் போலவே கோபம் பட வேண்டாம். வாக்குறுதிகளை ஓரளவு நிறைவேற்றுவீர்கள். கடுமையான உழைப்பு மட்டும் இருந்து கொண்டே இருக்கும்.
காதலர்களுக்கு இன்றைய நாள் இனிமை காணும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மேலும் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிஷ்ட எண்கள்: 3 மற்றும் 7
அதிஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிறம்.