தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.. ஒரு பக்கம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு சென்றாலும், மறுபக்கம் குணமடைந்து செல்வோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பில் ஒரு லட்சம் கடந்த தமிழ்நாடு இந்தியாவிலே அதிகம் பாதிப்பை சந்தித்த 2ஆவது மாநிலமாக உள்ளது.
நேற்றைய நிலவரம் படி 1,11,151 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 62,778 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். இதுவரை கொரோனாவுக்கு 1510 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று குறித்த விவரங்கள் வெளியாகியது. அதில் இன்று ஒரே நாளில் மட்டும் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 3,793-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 66,571 ஆக அதிகரித்துள்ளது..
மேலும் இன்று 61 பேர் உரிழந்துள்ளதால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,571-ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 46,833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.