போலி இ பாஸ்க்கு முடிவு கட்டுமாறு தமிழக அரசிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் ஒரு மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமெனில், E பாஸ் கட்டாயம் தேவை என தமிழக அரசு கூறியது. இதன்படி திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே இ பாஸ் வழங்கப்பட்டு வேறு மாவட்டங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பல டிராவல்ஸ் நிறுவனங்கள் திருமணம், இறப்பு உள்ளிட்டவற்றுக்கு போலியான சான்றிதழ்கள் ரெடி செய்து இ பாஸ் பெற்று அதனை ரூபாய் 4,500 வீதம் பொதுமக்களிடம் விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இவ்வாறு போலி இ பாஸ் பெற்று செல்பவர்கள் முறையான பரிசோதனை கூட செய்து கொள்ளாமல், தங்களது வீடுகளுக்குள் பதுங்கி கொள்வதாகவும் , இதனால் கொரோனா பாதிப்பு பிற மாவட்டங்களிலும் அதிகரிக்க தொடங்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுத்து இதற்கு முடிவு கட்டுமாறு பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.