Categories
உலக செய்திகள்

அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடு – இறுகும் நிலை…!!

ஆன்லைன் வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் தேசிய  நிறுவனங்களுக்கான ஆதரவை அதிகரிக்கவும் அரசு புதிய கொள்கை மாற்றங்களை எடுக்கிறது.  கடந்த இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பாக அரசு நடத்தும் ஆலோசனைகளின் விளைவாக அமேசான், கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களின் மீது அரசின் கட்டுப்பாடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் பொருளாதார பரிவர்த்தனை, ஆன்லைன் சில்லறை வர்த்தகம், குறுந்தகவல்கள் முறை உள்ளிட்ட அனைத்திலும் இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் கொடிக்கட்டிப் பறப்பதால் பாதிக்கப்பட்டுள்ள பல இந்திய நிறுவனங்கள் இந்த விவகாரத்தில் அரசின் ஆதரவை எதிர்பார்த்திருப்பதும் , இந்தக் கொள்கை மாற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்திய நுகர்வோரின் நலனைக் கருதியும் நாட்டின் பாதுகாப்பு வரி விதிப்பு உள்ளிட்டவை பாதுகாக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

Categories

Tech |