Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் கொள்ளை லாபம்…. நெகட்டிவ் ரிபோர்ட்டுக்கு ரூ2,500…. மருத்துவமனைக்கு சீல்….!!

உத்திரபிரதேசத்தில் கொரோனாவை வைத்து கொள்ளை லாபம் சம்பாதித்து வந்த மருத்துவமனைக்கு அம்மாநில அரசு சீல் வைத்துள்ளது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழ்நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் அயராது தங்களது பணியை மக்களுக்காக சேவையாக செய்து வருகின்றனர். இவர்கள் மக்களால் தற்போது போற்றப்படுகின்றனர். இருப்பினும் சில தனியார் மருத்துவமனைகளும், சில அதிகாரிகளும் செய்யும் பெரிய தவறுகள், மனிதத்தன்மையற்ற செயல்கள் இந்த துறைகளை ஒரு நிமிடத்தில் கொச்சைப்படுத்திவிடுகிறது.

அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று கொரோனாவை வைத்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறது. அதாவது, கொரோனாவுக்கான நெகட்டிவ் ரிப்போர்ட் கொடுப்பதற்காக ரூபாய் 2500 ரூபாய் வசூலிப்பதாக அந்த மருத்துவமனையின் மீது புகார் எழுந்துள்ளது. இதற்கான ஆதாரமும், வீடியோவுடன் வெளியானதால், அந்த மருத்துவமனைக்கான லைசன்சை ரத்து செய்ததுடன், மருத்துவமனை நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |