Categories
உலக செய்திகள்

104 நாட்கள் ஆச்சு…. என்ன செய்யுது USA ? வியக்கும் உலக நாடுகள்… மகிழ்ச்சியில் அமெரிக்கர்கள் …!!

கொரோனா உயிரிழப்பை அமெரிக்கா தொடர்ந்து குறைத்து வருவது மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. இருநூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனாவின் தாக்கத்துக்கு ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  65 லட்சம் 68ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகளவில் கொரோனாவில் சிக்கி கொண்ட நாடாக  அமெரிக்கா இருந்து வருகின்றது. அங்கு மட்டும் பாதிப்பு 30 லட்சத்தை நெருங்கிக்கொண்டு இருக்கின்றது. 1.32 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகிற்க்கே சிம்ம சொப்பனமாக விளங்கிய அமெரிக்காவுக்கு கண்ணுக்கு தெரியாத வைரஸ் மிகப்பெரும்  தலைவலியாக கொடுத்துள்ளது.

மார்ச் மாதம் தொடங்கி ஏறக்குறைய 5 மாதங்கள் (ஜூலை வரை) இந்த தொற்று எப்போது குறையும் என்ற எதிர்பார்ப்புடன் அந்நாட்டு மக்கள் காலத்தை கடத்தி வருகின்றனர்.  அதுவும் இந்த மாதம் 2 மற்றும் 3ஆம் தேதி இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டது. ( 57,232, 56,268) என்ற எண்ணிக்கையில் உச்சம் பெற்றதை கண்டு மக்கள் அதிர்ந்து போனார்கள். ஆனாலும் கொரோனவை எதிர்த்து போராடும் அமெரிக்கா அதனை வீழ்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை என்று மற்ற நாடுகள் சொல்லும் அளவுக்கு கடந்த இரண்டு நாட்களை தனக்கானதாக மாற்றியுள்ளது.

தினமும் 1,500, 2,000, 2500 என்று உயிரிழப்புகளை கொடுத்து வந்த அமெரிக்கா கடந்த 3 வாரங்களாக 1000த்திற்கும் குறைவான இறப்புக்களை சந்தித்து வந்தது. அதை மேலும் குறைத்த அமெரிக்கா கடந்த இரண்டு நாட்களில் ( 254, 251 ) என மற்ற நாடுகளை வியப்படைய வைத்துள்ளது. இந்த 2 நாட்களில் அதன் பாதிப்பு ( 45,182, 44,530 ) அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் உயிரிழப்பு குறைந்து இருப்பது அமெரிக்கா மீளுவதை உணர்த்தியுள்ளது.

கடைசியாக கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி 181 பேர் கொரோனவால் உயிரிழந்த நிலையில் அதற்க்கு அடுத்த நாள் மார்ச் 25ஆம் தேதி 307ஆக இருந்த எண்ணிக்கை தொடர்ந்து உச்சம் பெற்று 2,749வரை சென்றது. அதன் பிறகு சொல்லப்போனால் 104 நாட்களுக்கு பின்னர் குறைவான உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இது மக்களிடையே புதிய நம்பிக்கையை பாய்ச்சியுள்ள அதே நேரத்தில் கொரோனா பாதிப்பும் குறைந்தால் நன்றாக இருக்கும் என்று அமெரிக்கர்கள் கருதுகிறார்கள்.

Categories

Tech |