தோனி என்று சொன்னாலே நமது நினைவுக்கு வருவது கேப்டன் கூல். எவ்வளவு கடினமான சூழலிலும் மிகவும் கூலாக விளையாடக்கூடிய கேப்டன். இவருடைய புகழ் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அதற்கு இந்த பிறவி போதாது என்றுதான் சொல்ல வேண்டும். கேப்டன் கூல் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடக்கிய தொகுப்பு.
தோனி தனது தனித்துவமான ஹெளிகாப்டர் சோட்டை தனது நண்பரான சந்தோஷ் லாலிடம் தான் கற்றுக் கொண்டுள்ளார்.
தோனியின் கேப்டன் ஆக்குவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் சச்சின் தான் பரிந்துரை செய்துள்ளார்.
தோனி முன்னால் வைத்திருந்த நீளமான ஹேர் ஸ்டைலை ஹிந்தி நடிகரான ஜான் ஆபிரகாமை பார்த்து தான்.
தோனி கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்பு கால்பந்தில் அதிகம் ஆர்வம் வைத்துள்ளார். மேலும் இவருக்கு பேட்மிட்டன் என்றாலும் மிகவும் பிடிக்குமாம்.
தோனி 15 குளிர்பானம் மற்றும் ஆடை நிறுவனங்கள் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
முதல் ஐபிஎல் போட்டியில் அதிக விலைக்கு ஏலம் போனவர் தோனி தான். இவரின் ஏலத்தொகை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
தோனிக்கு பைக் என்றால் மிகவும் பிடிக்குமாம். இவர் தற்போது 23 பைக் வரை வைத்திருக்கிறார்.
தோனி ஐசிசியின் சிறந்த வீரர் என்பதற்கான விருதினை இரண்டு முறை பெற்றிருக்கிறார்.
தோனி இந்திய கிரிக்கெட் வீரர் ஆவதற்கு முன்பு கரக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டர் ஆக 2003 வரை இருந்தார்.
தோனியின் மொத்த சொத்தின் மதிப்பு இன்றைய தேதிக்கு 30 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.