Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காதலித்து ஏமாற்றி விட்டு… தலைமறைவான இளைஞர்… ஸ்டேஷன் முன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்.!!

தன்னை காதலித்து ஏமாற்றிய இளைஞரை கைது செய்ய கோரி இளம்பெண் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகிலுள்ள பகவான் பட்டியைச் சேர்ந்தவர் ராம்கி.. இவருக்கு வயது 22 ஆகிறது.. ராம்கி கவரப்பட்டியைச் சேர்ந்த தனது மாமன் மகள் உறவு முறை கொண்ட இளம்பெண்ணை கடந்த ஓராண்டிக்கும் மேலாக காதலித்து வந்துள்ளார். அடிக்கடி தனிமையில் நெருக்கமாக இருந்து வந்ததால் 5 மாதம் கர்ப்பிணியான அந்த பெண், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு இளைஞரை வற்புறுத்தி கேட்டுள்ளார்..

ஆனால் இதனை ஏற்க மறுத்த ராம்கி தலைமறைவாகி விட்டார்.. ஆகவே ராம்கியை கைது செய்யக் கோரி, அந்தபெண் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருந்தார்..

இந்தநிலையில் இதுவரை சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்யாத காவல் துறையினரை  கண்டித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது பெற்றோர்களுடன் ஸ்டேஷன்  முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

பின்னர்  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளர் பிருந்தா, தலைமறைவாகயிருக்கும் இளைஞரை இன்னும் 2 நாள்களில் கைது செய்வதாக கூறினார். இதையடுத்து பெண்ணின் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். தனது பெற்றோர்களுடன் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அந்தபகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |