Categories
உலக செய்திகள்

சாப்பிட்ட தான் செய்யுறாங்க…. உலகமே நடுங்குது… அச்சுறுத்தும் சீனர்களின் உணவுப்பழக்கம் ..!!

எந்த உயிரினத்தைக் கண்டாலும் வாய்க்கு ருசியாக சமைத்துச் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் சீனர்கள்.. இவர்களின் இந்த உணவுப் பழக்க வழக்கத்தால் தான் ஒவ்வொரு நாளும் புதியவகை நோய்கள் பரவிக்கொண்டிருக்கிறதோ என்ற அச்சத்தை பல உலகநாடுகளும் வெளிப்படுத்தி வருகின்றன. சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவாகி உலகையே அச்சுறுத்தி வருகிறது கொடூர கொரோனா. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி வெளியே வரமுடியாமல் உலகநாடுகள் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சீனாவில் இருந்து வந்த இன்னொரு செய்தி உலக மக்கள் தலையில் இடியாய் இறங்கியிருக்கிறது…

சீனாவின் பயன்னோர் (Bayannur ) நகரில் இருவருக்கு புபோனிக் பிளேக் நோய் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது சீனாவில் வேகமாகப் பரவிவரும் இந்த புபோனிக் பிளேக் காரணமாக, பாதிக்க்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 146 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். எலிகள் மற்றும் மர்மோர்ட் எனப்படும் ஒருவகை அணில்கள் மூலமாக இந்த தொற்று பரவுகிறது. ஏற்கனவே பிளாக் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் பயம் எதற்கு? என்று எண்ணினாலும், எலிகள் மூலம் பரவும் பிளேக் நோய்க்கான தடுப்பூசி மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புபோனிக் பிளேக் நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை என்பதுதான் இந்த இடத்தில் மிகமுக்கியமான விஷயம். பொதுவாகவே பாம்பு, பூச்சி, வௌவால் உள்ளிட்ட உயிரினங்களை வகை வகையாக வறுத்துத் திங்கும் பழக்கம் கொண்டவர்கள் சீன மக்கள். வூஹான் நகர மார்க்கெட்டில் விற்கப்பட்ட இதுபோன்ற உணவுப்பொருட்களால் தான் கொரோனா பரவியது என்று ஏற்கனவே சீனா மீதும், சீனா மக்களின் உணவுப்பழக்கவழக்கங்களின் மீதும் பல நாடுகள் கடுங்கோபத்தில் இருக்கின்றன.. இந்நிலையில்தான் மர்மோட் வகை அணிலின் இறைச்சியை சாப்பிட்டதால்தான் புபோனிக் பிளேக் நோய் பரவிக்கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.. இதனால்தான் எரிகிற கொள்ளியில் எண்ணை ஊற்றியதைப்போல,சீனாவின் உணவுப் பழக்க வழக்கத்தின் மீது உலக மக்களின் கோபம் மேலும் அதிகரித்திருக்கிறது

Categories

Tech |